
இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது… “சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை…”