கம்பராமாயணம் – 66 : பகுதி 1

இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது… “சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை…”

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 1

ஜடாயுவின் இராமாயண உரை

ஜூன் 20,21 தேதிகளில், திருவண்ணாமலையில், தர்ம ரக்ஷண சமிதி அமைப்பின் ஆன்மீகப் பயிற்சி முகாமில், இரண்டு நாட்களாக, ஆறு அமர்வுகளில் இராம காதை முழுவதையும் அடியேன் உரையாற்றினேன் (ஆறு காண்டங்கள், ஆறரை மணி நேரம்). அதன் பதிவுகளை இந்த Playlistல் காணலாம். இந்த உரைகள் சம்பிரதாயமான கதாகாலட்சேப நடையிலோ, முற்றிலும் பண்டிதத் தமிழிலோ அல்லது மொத்தமும் பேச்சு வழக்கிலோ இல்லாமல் சகஜமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறேன். கதையின் சுவாரஸ்யம் குன்றாத வகையில் பொருத்தமான இடங்களில் கம்பராமாயணப் பாடல்களைக் கூறி, விளக்கிச் சென்றிருக்கிறேன்…

View More ஜடாயுவின் இராமாயண உரை

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8

துயரம் தைரியத்தைக் கெடுக்கிறது; கல்வி தந்த அறிவை மறைக்கிறது. ஆக துயரம் எல்லாவற்றையும் அழிக்கிறது. அப்படியாக துயரம் என்பது நமக்கு எதிரிகள் எல்லாவற்றுள்ளுள் பெரிய எதிரியாக உருவெடுக்கிறது. இந்த உலகில், மகன் என்னதான் தீயவனாக இருந்தாலும் எந்த பொறுப்பான தந்தை தன் மகனைக் கைவிடுவார்? அல்லது நாடு கடத்தப்படும் எந்த மகன்தான் தன் தந்தையை வெறுக்காது இருப்பான்?

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8