அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…

View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து – பிரதமர் மோடி

26.11.2021 ந் தேதி அரசமைப்புச் சட்டம் , அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்…

View More குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து – பிரதமர் மோடி

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை.. பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல்… தமிழகத்தில் கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்…

View More ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2

தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…

View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2

கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…

View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன… ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும். இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.. அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?…

View More 2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே… ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்….

View More ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..

View More நெருக்கடி நிலை யாருக்கு?

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது….

View More ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அமெரிக்க அதிபர் அரசியல் – 4

அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள்[வாக்களிக்கும் மக்கள்] தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள்[வாக்களிக்கும் மக்கள்] தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள்.

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல இருக்கிறது என்று தோன்றலாம். அது ஏன் அப்படித் தீர்மானிக்கப்பட்ட்து என்பது முன்பகுதிகளில் விளக்கப்பட்டது.

அதிபரின் வாரிசுகளைப்பற்றிச் சொல்லும்முன்னரே, அவரை எப்படிப் பதவியிலிருந்து நீக்குவது என்பதை முதலில் சொல்லுகிறது, அரசியல் அமைப்பின் இரண்டாம்பகுதியின் நான்காம் பிரிவு:

“[நாட்டுத்]துரோகம், லஞ்சஊழல், அல்லது மற்ற பெருங்குற்றங்களும், சிறுகுற்றங்களும் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, அது உறுதியாக்கப்பட்டால், அமெரிக்காவின் அதிபர், துணைத்தலைவர், மற்ற குடியாட்சி அதிகாரிகள் அப்பதவியிலிருந்து விலக்கப்படுவர்.”[3]

நன்றி: familypedia.wikia.com

[அமெரிக்க அதிபரி ஆன்ட்ரூ ஜாக்ஸனை பதவிநீக்கம்செய்யமுயல்வது பற்றிய கேலிப்படம்]

பழைய[மாஜி] அமெரிக்க அதிபர் பில் க்லின்ட்டனை வழக்குமன்றத்தில் பொய்யுரைத்தார் என்று அப்போதிருந்த பிரதிநிதிசபை குற்றம்சாட்டி உறுதிசெய்தது [impeached]. ஆயினும், அதை செனட்டும் உறுதிசெய்யாததால், பில் க்லின்ட்டன் பதவிநீக்கம் செய்யப்படவில்லை.[4],[5],[6]

அதற்குப் பிறகு வந்த பன்னிரண்டாவது திருத்தம் ஒரு முக்கியமான ஷரத்தைக் கொணர்ந்தது. அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அது.[7] இதன்மூலம் ஒரு மாநிலத்திடமே அமெரிக்காவின் செயலாற்றும் உரிமை குவிந்துவிடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

autoஅதிபரின் வாரிசுகளைப் பற்றிச் சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு — ஊருக்குப்புதிதாக வருபவர்களை நேர்வழியில் போகுமிடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் இழுத்தடிக்கும் ஒருசில ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்களைப்போல [ஆட்டோ/டாக்சி ஓட்டுனர்கள் மன்னிக்க; இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை, இந்தியவின் மற்ற மாகாணங்களிலும், உலகின் பலநாடுகளிலும் நடக்கிறது!] எங்கெங்கோ இழுத்தடிக்கப்படுவதுபோல உணரவேண்டாம். அமெரிக்க அரசியல் அமைப்பைப்பற்றி அறியவிரும்புவர்களுக்கு அதை நன்றாகச் சுட்டிக்[ற்றி]காட்ட வேண்டுமல்லவா!

சொல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் அரசியல் அமைப்பின் இருபதாம் திருத்தத்தில் சொல்லப்பட்டதால், ஒவ்வொரு திருத்தமாக இழுத்தடிக்க — மன்னிக்க – ஒவ்வொன்றாகச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதாவது, நவம்பர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் முடிந்து இன்னார் புதிய அதிபர் என்றும் தெரிந்துவிட்டது. அதென்ன நவம்பர் மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை என்று மனதுள் கேள்வி எழுகிறதா? அப்பொழுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவேண்டும் என்பது விதி — இல்லையில்லை, சட்டம்! தேர்தல் முடிந்தபின்வரும் ஜனவரி இருபதாம் தேதி அதிபர் பதவி ஏற்பார். அதற்குள் அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது? அவரது வாரிசு யார்?

அதைத்தான் இருபதாம் திருத்தம் சொல்கிறது:

“அதிபரின் பதவிக்காலம் துவங்குமுன்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறந்துவிட்டால், துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் [அமெரிக்க]அதிபராவார்.”[8]

அமெரிக்க அதிபராக இருமுறையே தேர்ந்தெடுக்கப்படலாம் என்று இருபத்தியிரண்டாம் திருத்தம் சொல்கிறது. இத்திருத்தம் 1947ல் கொண்டுவரப்பட்டு, 1951ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க அதிபர் எத்தனைமுறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது அரசியல்சாசனத்தில் முதலில் வரையறுக்கப்படாவிட்டாலும், முதல் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் முதலானோர் தானாகவே இருமுறைக்குப்பின் போட்டியிடவில்லை. எழுத்திலில்லாத இம்முறை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களால் கடைப்பிடிக்கப்பட்ட்து.

ஆயினும், அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவு அடைந்தபோது அதை மீட்டெடுத்தவர் என்பதாலும், இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் சிறந்தமுறையில் அமெரிக்காவை வழிநடத்திச்சென்று வெற்றிக்கு அடிகோலியவர் என்பதாலும், மூன்றாம்முறை தேர்தலுக்கு நின்ற பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர்காலத்திற்குப்பின்னர், மற்ற அதிபர்கள் கைப்பிடித்த இருமுறை பதவிக்காலமே சிறந்த ஒன்று என்றும், மக்களாட்சி நடந்துவரும் ஒரு நாடு தனிமனிதர் ஒருவரால் பல பத்தாண்டுகள் ஆளப்படக்கூடாது என்பதாலும், அதிபர் பதவியை இருமுறையோடு கட்டுப்படுத்தும் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவழியாக அமெரிக்க அதிபரின் வாரிசுகளைச் சுட்டிக்காட்டும் இருபத்தைந்தாம் திருத்தத்திற்கு வந்துசேர்ந்துவிட்டோம். நிச்சயமாக வண்டி வேறுவழியில் செல்லாது, வாருங்கள்!

பிரிவு 1: [அமெரிக்க] அதிபர் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ, துணைத்தலைவர் அதிபராவார்.

பிரிவு 2: துணைத்தலைவர் பதவி காலியானால் {அவர் நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ என்று புரிந்துகொள்ளவும்] அதிபர் ஒரு துணைத்தலைவரை நியமிப்பார். சட்டமன்றத்தின் இருபிரிவுகளும் அதை உறுதிசெய்யதபின் அவர் பதவியேற்பார்.

அமெரிக்கத் துணைத்தலைவர் செனட்டின் தலைவர். அவரை செனட்டின் ‘பிரசிடென்ட் ப்ரோ டெம்ப்போரே [President Pro Tempore]’ என்றழைக்கிறார்கள். பிரதிநிதிசபையின் தலைவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ என்றழைக்கப்படுகிறார். எனவே, துணைத்தலைவருக்கு அடுத்தபடி அதிகாரம் பெற்றவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’தான்.

ஒருவேளை, அமெரிக்க அதிபரும், துணைத்தலைவரும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகிச் செயலிழந்துவிட்டால், ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பார்.

ஒருவழியாக அமெரிக்க அதிபர்பற்றிய நெளிவுசுளிவுகளை ஓரளவு அறிந்துகொண்டோம். அடுத்தபடி, தேர்தலுக்குச் செல்வோம்.

8. கட்சி வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் பதவிக்குவர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்றும், அதிபர் எப்பொழுது பதவிநீக்கம் செய்யப்படுவார், அதை எப்படிச் செய்வது, அவர் பதவியிலிருந்து நீங்கினாலோ, நீக்கப்பட்டாலோ, நீங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, பதவியிலிருக்கும்போது இறந்தாலோ அவரது பதவிக்கு யார் வருவார்கள் என்றும் அறிந்துகொண்டோம்.

அப்படி அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்தலுக்குநிற்பவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அப்படி நடக்கும் தேர்தலில் மற்றநாடுகளுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பதையும் கண்டுகொண்டோம்.

தேர்தல் என்றாலே பல அரசியல் கட்சிகள் இருக்கும்; எனவே, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் வேட்பாளர்கள் அப்பதவிக்குப் போட்டியிடுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே!

இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிமேலிடம் யார் அக்கட்சியின் வேட்பாளராக நிற்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது. மற்றநாடுகளிலும் அப்படியே! இப்படிச் செயல்படுவது, போட்டியிடவிரும்பும் பலரில், அல்லது சிலரில் சிறந்தவரை, வெற்றிபெறும்வாய்ப்பு உள்ளவரை, அக்கட்சி முடிவுசெய்ய உதவுகிறது என்பது கொள்கையளவில் உண்மையாகும். ஆனால், கட்சிச் செயலகத்தின் நான்கு சுவர்களுக்குள் என்னநடக்கிறது என்பதை நாம் ஊகித்தாலும், அதைப்பற்றி இங்கு விவாதிக்கவேண்டிய அவசியமோ, அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய ஆவலுமோ இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்கு அப்பாற்பட்டது.

ஆகையால், அமெரிக்க அரசியலுக்குத் திரும்பிவருவோம்…

பிரித்தானியக் கட்சிகள்

ஆஸ்திரேலியக் கட்சிகள்

மக்களாட்சி நிலவும் எந்தநாட்டிலும் ஒருசில நாடளாவிய கட்சிகளும், பல பிராந்தியக் கட்சிகளும் உண்டு. பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் கிட்டத்தட்ட பதினேழு கட்சிகள் உள்ளன. அவற்றில் பிரிட்டனைப் பொறுத்தவரை கன்செர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் முக்கியமான இரண்டு கட்சிகள். இவைதான் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி [இந்தியாவைப்போல] நடந்துவருகிறது. அக்கூட்டணியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் லிபரல் பார்ட்டி ஆஃப் ஆஸ்திரேலியாவும், லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்தும் ஆகும். இதில் லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்து தமிழ்நாட்டின் திமுக, அதிமுக போன்ற பிராந்தீயக் கட்சி. எதிர்க்கட்சி ஆஸ்திரேலியன் லேபர் பார்ட்டி.

அமெரிக்கக் கட்சிகள்

குடியரசுக் கட்சியும்[Republican party], மக்களாட்சிக் கட்சியும் [Democratic party]

அமெரிக்காவிலும் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஐந்து நாடளாவிய கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட முப்பத்தியொன்று உதிரிக்கட்சிகளும் உள்ளன. இவற்றில் பெரியவை டெமக்ராடிக் [ஜனநாயக, அல்லது மக்களாட்சி] கட்சியும், ரிபப்லிகன் [குடியரசு] கட்சியும் ஆகும். சிறிய கட்சிகளில் குறிப்பிடத் தகுந்தவை லிபர்டேரியன் கட்சி, க்ரீன் கட்சி.

பிரபலமான அமெரிக்க அதிபர்களில் ஆபிரஹாம் லிங்கன், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்; பிராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, பில் க்லின்ட்டன், பராக் ஒபாமா ஆகியோர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதுபோக சுயேச்சையாக நின்று பதவிக்கு வருவபர்களும் உண்டு. சுயேச்சையாக வெற்றிபெற்றவர்கள் பொதுவாக பெரிய கட்சிகளான இரண்டில் ஒன்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது வழக்கமாக இருந்துவருகிறது. அவர்கள் அதை முன்னமேயே அறிவித்தும் விடுவார்கள்.

அமெரிக்காவில் எந்தக்கட்சி வேட்பாளரையும் கட்சி மேலிடம் முடிவுசெய்வதில்லை. அந்தந்தக் கட்சியைச் சார்ந்த மக்களே தீர்மானிக்கிறார்கள்.

வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை! உதாரணமாக ஒரு மாநில ஆளுநர்[கவர்னர்] பதவிக்குப் போட்டியிட ஜனநாயகக் கட்சியின்சார்பாக நான்குபேரும், குடியரசுக் கட்சியின்சார்பாக மூன்றுபேரும் முடிவெடுத்துத் தேர்தல் ஆணையத்தில் மனுக்கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்..

“அதுகிடக்கட்டும்! அமெரிக்க அதிபர் வேட்பாளரைப்பற்றிச் சொல்லாமல், மாநில ஆளுநரைப்பற்றி ஏன் சொல்கிறீர்?” என்று கேட்கிறீர்களா? முதலில் சுலபமானதைச் சொன்னால், பின்பு கடினமானதைச் சொல்லலாம் என்றுதான்..

“இவ்வளவு குழப்பமான அரசியல் என்றால், யாரைய்யா ஓட்டுப்போடுவார்கள்? கேட்கவே தலைசுற்றல் வருகிறது.” என்று அலுத்துக் கொள்கிறீர்களா?

வாஸ்தவம்தான்.

அதனால்தான் இங்கு இந்த கட்சிவேட்பாளர் தேர்தலில் அதிகமானவர் கலந்துகொள்வதில்லை. அப்படி நினைத்து, இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு அரிசோனாவில் மாநிலம் முழுவதற்கும் அறுபதே ஓட்டுச்சாவடிகளே திறக்கப்பட்டன. நினைப்புக்குமாறாக நிறையப்பேர் வாக்களிக்கவந்ததால், மணிக்கணக்காக [சில இடங்களில் ஐந்துமணிக்கும் மேலாகவே] வரிசையில் நிற்கவேண்டிவந்து, விசாரணைக்கமிஷன் அமைக்கவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது![i]அரிசோனா கவர்னை டக் டூசி இந்நிலைமை ஏற்கத்தக்கதல்ல என்று பொங்கியெழுந்துள்ளார்.[ii]

அதுபோகட்டும், விஷயத்திற்கு வருவோம்: ஓட்டுரிமையுள்ள வாக்காளர் அனைவரும் வாக்காளராகப் பதிவுசெய்யும்போது தாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களும் கட்சியில் இருக்கலாம், தடையில்லை. இதற்காக கட்சிக்கு சந்தா எதுவும் செலுத்தவேண்டியதில்லை. கட்சிவேட்பாளர் தேர்தலில் கலந்துகொள்ளவே இக்கேள்வி கேட்கப்படுகிறது. எக்கட்சியையும் சாராதவர் என்றால் ‘சுயேச்சை’ என்றும் பதிந்துகொள்ளலாம். சில மாகாணங்களில் சுயேச்சை என்று பதிந்துகொண்டால், எக்கட்சி வேட்பாளர் தேர்ந்தலிலும் வாக்களிக்க இயலாது.

ஆனால் அரிசோனாவில், சுயேச்சைகள் எக்கட்சி வேட்பாளருக்குவேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், ஒரு கட்சியைச்சேர்ந்தவர் என்று பதிந்தால் அக்கட்சி வேட்பாளர்களுக்குமட்டுமே வாக்களிக்க அனுமதி உண்டு. இதைப் பாதி-திறந்த, அல்லது பாதி-மூடிய கட்சித் தேர்தல் [semi-open, or semi-closed primary] என்கிறார்கள். ஆயினும், அமெரிக்காவில் இருபத்தியிரண்டு மாநிலங்களில் கட்சிசார்பு பற்றிக் கேட்பது இல்லை. இந்த மாகாணங்களில் திறந்த வேட்பாளர்தேர்வு [open primary] நடைபெறுகிறது.[iii]

ஏன் இந்தக் குழப்பம் என்கிறீர்களா? அதது, அந்தந்த மாநில உரிமையாகும். இவை பின்னால் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுரிமை பெற்றிருக்கிறது.

இப்படிக் குழப்பினால் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்றுதான் “வராதோர் வாக்கு [absentee ballot]” என்றொன்று இருக்கிறது. ஒட்டளிக்கப் பதிவு செய்துகொள்ளும்போதே, நமது முகவரியைக் கொடுத்து, வராதோர் வாக்குரிமை வேண்டும் என்று குறிப்பிட்டால், தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு முன்னதாகவே வாக்குச்சீட்டு நம்மைத்தேடி நம் வீட்டிற்கே வரும்.
“அட ராபணா, இப்படிச் செய்தால் வாக்கு ஊழல் நடக்காதா? வேட்பாளர்கள் கையூட்டு அளித்து வாக்கைச் சேகரித்து வெற்றிபெற்றுவிட்டால்…?” என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

View More அமெரிக்க அதிபர் அரசியல் – 4