Posts Tagged ‘ அரசுப் பள்ளிகள் ’

கல்வி, சமூகம், புத்தகம், விவாதம்

தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.... இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச - சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு... [மேலும்..»]

கல்வி, சினிமா

சாட்டை – திரை விமர்சனம்

சாட்டை – திரை விமர்சனம்

அனைத்தையும் எதிர்த்து தனிமனிதனாக ‘அரசாங்க வாத்தியாக’ கேள்வி கேட்கும், போராடும் தயாளன் எனும் இளம் இயற்பியல் ஆசிரியர். ஹீரோயிசம் இல்லாமல் வேறென்னவாக இருக்கப் போகிறது என்று கேட்கலாம் தான்... அவருடைய பெரிய வலிமை அவருடைய மதிப்பீடுகள் மட்டுமே என காட்டப்படுவதுதான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தார்மிக வலிமை. நம் தமிழ்ச் சூழலில் அது தான் வர்த்தக ரீதியான பலவீனமும்... இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம். பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது அனைத்து இந்து இயக்கங்களின்... [மேலும்..»]

கல்வி, தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 20

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்... உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்... உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.... [மேலும்..»]

விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 12

எழுமின் விழிமின் – 12

மக்கள் சத்துவகுணம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு சிறிது சிறிதாக அஞ்ஞானம் என்ற காரிருளில் தமோகுணம் என்ற மாபெரும் கடலில் மூழ்கிப் போவதை நீங்கள் கண்கூடாகக் காணவில்லையா?.. ஒருவன் ராஜஸ குணத்தின் வாயிலாகச் சென்றாலன்றி சாத்துவிக நிலையை அடைவது என்பது சாத்தியமாகுமா?... ஐரோப்பாவிலுள்ல பல நகரங்களையும் நான் சென்று பார்த்ததில் அந்தந்த நாட்டு ஏழை மக்களின் இன்ப நிலையையும், கல்வியறிவையும் கண்டேன். அப்பொழுது என் நாட்டு ஏழை மக்களின் நிலை பற்றியே கண்ணீர் உகுப்பது வழக்கம். ஏன் இந்த வித்தியாசம்? எனக்குத் தோன்றிய விடை “கல்வியே”. கல்வியினால்தான் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வருகிறது ... [மேலும்..»]

சமூகம்

தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?

தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?

திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை... பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள், வீடியோ

நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவளித்தனர். சாதாரண மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்... வழக்கமான ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் "தவறாம வந்திருங்க சார். இது நம்ம குழந்தைகளின் உரிமைக்காக" என்று அழைத்தாராம்.. "ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர்... தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம்."... [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

July 21, 2010
-
வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

”.. ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?” ... இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.. ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்... [மேலும்..»]

அனுபவம், பிறமதங்கள்

கிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை

கிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை

நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், நேர்காணல், வீடியோ

மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்

மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்

விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாதக் குழந்தை... இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாக காண முடிகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. றிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.. (விரிவான வீடியோ நேர்காணல்கள்) [மேலும்..»]

சமூகம், சிறுவர், பொது

தேவை: சமச்சீர் வசதிகள்

தேவை: சமச்சீர் வசதிகள்

அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும். [மேலும்..»]