Posts Tagged ‘ அரசு ஊழியர் ’

ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்... கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்… [மேலும்..»]

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

December 26, 2013
By

ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம்,  வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,... என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள்.... [மேலும்..»]