
இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்….. முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூகம்…. முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை….
Read more →