Posts Tagged ‘ அரவிந்த் கேஜ்ரிவால் ’

அரசியல், ஊடகங்கள், பொருளாதாரம்

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த... [மேலும்..»]

அரசியல்

நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி

நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி

காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2019 மே வரை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த நாட்டை ஆளும். அதன் பிறகும் பாஜக அரசு தொடர்வதற்குரிய பணிகளையே காங்கிரஸ் கட்சியின் துர் நடத்தைகள் உருவாக்கி வருகின்றன. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் பொறுமையுடன் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் நயவஞ்சகத் தந்திரங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கே எமனாகும். இதனை மக்கள் அவர்களுக்குப் புரிய வைப்பார்கள். [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு... ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

விவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா? ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா? கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்... கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும்? ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்?... [மேலும்..»]

அரசியல்

தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை... ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்... உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் - லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில... [மேலும்..»]

அரசியல்

டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது...முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது.... [மேலும்..»]

அரசியல், சமூகம், விவாதம்

ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?

ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?

அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்... எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை... [மேலும்..»]

அரசியல்

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப் பார்த்த தில்லிவாசிகள், இவருக்கு வாக்களித்ததன் கஷ்டகாலத்தை எண்ணி பெருமூச்செறிகிறார்கள். காலத்தின் கோலம்: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவால், புதிய மாற்றத்தை எதிர்பார்த்த பல இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆ.ஆ.க-யை இரண்டாவது கட்சியாகத் தேர்வு செய்தனர். அதுவே தில்லியில்... [மேலும்..»]

அரசியல்

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…   லோக்பால்: அன்று முதல் இன்று வரை… ஊழல் பெருக்கத்தின் போது தான் அதை ஒழிக்க என்ன செய்வது என்ற சிந்தனை வரும். அவ்வாறே 1960களில் இந்தியாவில் ஊழல் நிலைகொள்ள ஆரம்பித்த தருணங்களில்... [மேலும்..»]

அரசியல்

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு.... இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey