Posts Tagged ‘ அரேபிய இசுலாமிய நாடுகள் ’

மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது... மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது... முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 3

August 31, 2013
By

இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்..... முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 2

August 12, 2013
By

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்... தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்... இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 1

August 1, 2013
By

அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.... எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல... [மேலும்..»]

அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்

அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது உண்மையிலேயே பரபரப்பு செய்தி தான்.. பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.... [மேலும்..»]