6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஃபிப்ரவரி 24 – வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.

View More 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.

View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

ஃபிப் 19, 2012, ஞாயிறு – யூத் ஃபார் தர்மா (Youth for Dharma) அமைப்பின் சார்பில், “ஹிந்து வாழ்வியல் முறையே உலக பொருளாதார சிக்கலுக்கு தீர்வு” என்கிற தலைப்பில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் எஸ். குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார். அனுமதி இலவசம். அனைவரும் வருக.

View More கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.

View More யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை