Posts Tagged ‘ அறிவியல் கல்வி ’

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே - என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம்... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்... பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, ... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்... ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி... [மேலும்..»]

இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது.... [மேலும்..»]

கால்குலஸ் வாழ்க்கை

அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்" ... வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.... [மேலும்..»]