Posts Tagged ‘ அவதூறுகள் ’

மகளிர், மஹாபாரதம், ராமாயணம், விவாதம்

திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்

திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்

ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக்... [மேலும்..»]

அரசியல், ஊடகங்கள், சமூகம், நிகழ்வுகள், விவாதம்

தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்... ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும்... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சமூகம், விவாதம்

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், மகளிர்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது... பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? "அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், விவாதம்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

January 25, 2018
-
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்... காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான்.... [மேலும்..»]

அரசியல், கல்வி, விவாதம்

வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

January 12, 2018
-
வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு அடிமை நோய்... அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும்.. இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், விவாதம், வைணவம்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
-
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]

அரசியல், புத்தகம், வரலாறு, விவாதம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது - தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத்... [மேலும்..»]

ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை –  2

சுவாமி நித்யானந்தரால் தமது சேவையின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நற்பயன்களை தரமுடியும். அவர் தீங்கு விளைவித்தார் என்ற வாதம் நிரூபிக்கப்படாமல் தவிடுபொடியாகி விட்டது. அவரிடம் பயன்பெற்ற ஏராளமான மக்கள் அவற்றை சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் அவர்களது குரலை வெளியிட மறுத்து வருகின்றன. ஒற்றைப் புகாருக்கு மட்டும் ஊடகத்தின் வலுவான ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கிறது.... ஒரு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சுவாமி நித்யானந்தருக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. அவருக்கு எதிராக பொய்யான புகார்கள் அடிப்படையில் அவப்பெயரை உண்டாக்க முனைந்த ஒருவருக்கு அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது அந்த நீதிமன்றம்... பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும்... [மேலும்..»]

ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1

சுவாமி நித்யானந்தர் மீது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திடீரென பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பெண்ணின் குற்றச்சாட்டினைத்தவிர, ஆரம்பத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோதமான நிதிமுறைகேடு, நில அபகரிப்பு, மற்றுமுள்ள சட்டத்துக்குமாறான நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன.... இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மெத்தனப்போக்கினை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் திறமையற்றதாக வெட்கிதலைகுனிய வைக்கப்பட்டதற்கும் பழிவாங்கப்போகிறதா? பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டமையாலும் தன்னுடைய முகத்தினை காப்பாற்றிக்கொள்வதற்காகக் காவல்துறை மேலும் கடுமையானதாக நடந்து கொள்ளப் போகிறதா? ...... [மேலும்..»]