Posts Tagged ‘ அவதூறு ’

ஆன்மிகம், இலக்கியம், சமூகம், விவாதம்

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், மகளிர்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது... பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? "அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி... [மேலும்..»]

அரசியல், கல்வி, விவாதம்

வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

January 12, 2018
-
வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு அடிமை நோய்... அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும்.. இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், விவாதம், வைணவம்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
-
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]

அரசியல், சமூகம், வரலாறு, விவாதம்

அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

July 12, 2017
-
அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை... அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது... [மேலும்..»]

ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை –  2

சுவாமி நித்யானந்தரால் தமது சேவையின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நற்பயன்களை தரமுடியும். அவர் தீங்கு விளைவித்தார் என்ற வாதம் நிரூபிக்கப்படாமல் தவிடுபொடியாகி விட்டது. அவரிடம் பயன்பெற்ற ஏராளமான மக்கள் அவற்றை சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் அவர்களது குரலை வெளியிட மறுத்து வருகின்றன. ஒற்றைப் புகாருக்கு மட்டும் ஊடகத்தின் வலுவான ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கிறது.... ஒரு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சுவாமி நித்யானந்தருக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. அவருக்கு எதிராக பொய்யான புகார்கள் அடிப்படையில் அவப்பெயரை உண்டாக்க முனைந்த ஒருவருக்கு அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது அந்த நீதிமன்றம்... பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும்... [மேலும்..»]

ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1

சுவாமி நித்யானந்தர் மீது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திடீரென பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பெண்ணின் குற்றச்சாட்டினைத்தவிர, ஆரம்பத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோதமான நிதிமுறைகேடு, நில அபகரிப்பு, மற்றுமுள்ள சட்டத்துக்குமாறான நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன.... இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மெத்தனப்போக்கினை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் திறமையற்றதாக வெட்கிதலைகுனிய வைக்கப்பட்டதற்கும் பழிவாங்கப்போகிறதா? பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டமையாலும் தன்னுடைய முகத்தினை காப்பாற்றிக்கொள்வதற்காகக் காவல்துறை மேலும் கடுமையானதாக நடந்து கொள்ளப் போகிறதா? ...... [மேலும்..»]

இலக்கியம், கல்வி, விவாதம்

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு

ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப் பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை... உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப் படைப்புகள் தந்த பெண்ணை அவமானப் படுத்துவது தமிழினத்தை அவமானப் படுத்துவது ஆகும்.. இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா? அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம்... மாணவர் நலனும், பல்கலைக் கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கு பலியாகி விடக் கூடாது... [மேலும்..»]

தொடர், வரலாறு, விவாதம்

பாரதி: மரபும் திரிபும் – 3

பாரதி: மரபும் திரிபும் – 3

''நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது... சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா... .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்... நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்-- ஆதரவாக இருந்ததினால்-- பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்-- மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார். [மேலும்..»]

இலக்கியம், தொடர்

பாரதி: மரபும் திரிபும் – 2

பாரதி: மரபும் திரிபும் – 2

இவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை? வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்... காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும்... [மேலும்..»]