
அ.மார்க்ஸ் எழுதிய ‘அம்பேத்கர் வாழ்வில்’ என்ற புத்தகத்தில் ஒரு மெகாபுளுகை எழுதியிருக்கிறார்… “… இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்களில் முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது… முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர்… மறுபிறப்பில் எனக்கு முழுநம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்… என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்.’’