Posts Tagged ‘ ஆகமம் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை. சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சைவம்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்... சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை... [மேலும்..»]

ஆன்மிகம், கோயில்கள்

கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி

கதிர்காமப் பண்பாடு  – ஒரு காட்சி

கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தமிழ்ச் சொல்லாகக் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோருமாக, ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிக்கின்றனர்... 1908 முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், அது சாத்தியமாகவில்லை... பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று போற்றுகிறார்கள்... கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கோயில்கள்

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத் தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம்... [மேலும்..»]