Posts Tagged ‘ ஆசாத் காஷ்மீர் ’

எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள... [மேலும்..»]

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு... [மேலும்..»]