Posts Tagged ‘ ஆசிரியர்கள் ’

நமது கல்வித் துறையில் பத்து குறைகள்

September 17, 2020
By

அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்... தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை... ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை.... [மேலும்..»]

ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்... கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்… [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே - என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம்... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்... பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, ... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்... ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி... [மேலும்..»]

கால்குலஸ் வாழ்க்கை

அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்" ... வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.... [மேலும்..»]

குரு உத்ஸவ்

September 2, 2014
By

நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர்.... 'குரு' என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது. உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்...... [மேலும்..»]

சாட்டை – திரை விமர்சனம்

அனைத்தையும் எதிர்த்து தனிமனிதனாக ‘அரசாங்க வாத்தியாக’ கேள்வி கேட்கும், போராடும் தயாளன் எனும் இளம் இயற்பியல் ஆசிரியர். ஹீரோயிசம் இல்லாமல் வேறென்னவாக இருக்கப் போகிறது என்று கேட்கலாம் தான்... அவருடைய பெரிய வலிமை அவருடைய மதிப்பீடுகள் மட்டுமே என காட்டப்படுவதுதான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தார்மிக வலிமை. நம் தமிழ்ச் சூழலில் அது தான் வர்த்தக ரீதியான பலவீனமும்... இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம். பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது அனைத்து இந்து இயக்கங்களின்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்... உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்... உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.... [மேலும்..»]

பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

March 21, 2012
By

பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள்... மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை... கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்... [மேலும்..»]