Posts Tagged ‘ ஆண்டாள் ’

அரசியல், கல்வி, விவாதம்

வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

January 12, 2018
-
வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும் தமிழும்

எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு அடிமை நோய்... அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும்.. இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், விவாதம், வைணவம்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
-
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கவிதை

ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி

ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி

எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்... புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்... மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் ,... [மேலும்..»]

இலக்கியம், கல்வி, விவாதம்

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு

ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப் பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை... உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப் படைப்புகள் தந்த பெண்ணை அவமானப் படுத்துவது தமிழினத்தை அவமானப் படுத்துவது ஆகும்.. இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா? அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம்... மாணவர் நலனும், பல்கலைக் கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கு பலியாகி விடக் கூடாது... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள். [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும் [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம், வைணவம்

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை... அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ.. [மேலும்..»]

சமூகம், சினிமா, மகளிர்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்... ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வைணவம்

அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். என்னைக் கொண்டு தன்னைப் பாடுவித்தான்’ என்று ஆழ்வார்கள் சொல்லுதலால் இப்பாசுரங்கள் ‘அருளிச்செயல்கள்’ என்றும் திவ்விய பிரபந்தம் என்றும் சேவித்துப் போற்றப்படுகின்றது.கடினமான ஒரு மதத்தை பாகவதமதமாக சுலபமான நெறியாக மாற்றிய சிறப்பும் ஆழ்வார்களைச் சார்ந்ததே. [மேலும்..»]

இலக்கியம், கவிதை, வைணவம்

சில ஆழ்வார் பாடல்கள் – 2

September 6, 2010
-
சில ஆழ்வார் பாடல்கள் – 2

இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்... அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு - இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்... உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்... [மேலும்..»]