2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….

View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்

தயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு… தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்… ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல…

View More சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்

யார் இந்த நீரா ராடியா?

நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி?… நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது… இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

View More யார் இந்த நீரா ராடியா?