Posts Tagged ‘ ஆதிதிராவிடர் ’

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ –குடியரசு 9-5-1937   இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :... [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06

ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள். [மேலும்..»]