Posts Tagged ‘ ஆத்மானுபவம் ’

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7

இந்திரன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் இந்திரியங்கள் என்ற சொல்லாடலும். நமது பஞ்ச இந்திரியங்கள் வெளிமுகமாக நோக்கினால், நாம் உலகியலில் ஈடுபடுவோம். அவ்வாறான வெளிப்புற நோக்கை அடக்கி, அதை உண்முக நோக்கிற்கு அதனைப் பழக்கப் பழக்க, உலகைப் பற்றிய உண்மைகளும் தெரியவரும். மனத்தின் உண்மை சொரூபமும் தெரியவரும். .. நம் உலகியல் சிந்தனைகளும், அதையொட்டி நடக்கும் செயல்களும் மனத்தின் கண் குவிந்துள்ள வாசனைகளால் உந்தப்பட்டு நடைபெறுவதால், அவை அனைத்துமே நம் உண்மை சொரூபம் பற்றிய அறியாமையால் விளைந்தவை ஆகும். அந்த அறியாமையைப் போக்க இந்திர சக்தியால் வளரும் ஆன்ம அறிவு ஒன்றால் மட்டுமே முடியும். .. [மேலும்..»]

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6

வெளியுலகில் அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோம யக்ஞங்கள், நம் உள்ளத்தளவில் புத்தியின் மூலம் நம்மையே தியாகம் செய்யும் அளவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய ஒரு குறியீடுதான். அதில் முதன்மையானது உலகியலில் “நான்” என்னும் எண்ணம் அழியும் வகையில் நமது சிந்தனை-சொல்-செயல் மூன்றும் ஒன்றாகச் செயல்படுவது. அப்போது மட்டுமே, “தான்” எனும் தெய்வீக உணர்வு எஞ்சி நிற்கும். அந்த நிலை கிட்டினால் மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ள எதுவும் வேறுபட்டதல்ல, அனைத்தும் ஒன்றே என்ற உண்மை உணரப்படும்... அவ்வாறு உணர்ந்ததாலேயே, இதை விளக்கிக் கூறிய ரிஷி, அந்த நிலையில் தான் “அனைத்து உலகின் நண்பன்” என்ற அர்த்தம்... [மேலும்..»]

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5

அதாவது கடவுள் எனும் தத்துவம் எங்கோ மறைந்து, காணமுடியாத இடத்தில் இருப்பதாகவோ, ஏதோ சில ரிஷிகளின் கற்பனையில் உதித்த உருவகங்களாகவோ எண்ணுவது தவறானது. அவை அனைத்துமே நமது தினசரி அனுபவங்களின் அடிப்படையிலும், இயற்கையில் காணப்படுபவைகளையும் ஒட்டியே உருவானவைகள்... ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கடவுட்களும், இருக்கும் ஒரு பிரம்மத்தின் நான்கு முகங்களே என்பதால் பிரம்மனுக்கு நான்முகன் என்றொரு பெயரும் உண்டு. அவை அனைத்தும் ஒன்றா என்று கேட்டால் அதுவும் சரியே எனலாம்... [மேலும்..»]

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4

இருளில் இருந்து ஒருவன் விழித்து எழும் தருணமான அதிகாலை வேளையை அவர்கள் “உஷஸ்” என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு தனி மகத்துவத்தையும் அளித்தனர். ஏனென்றால் அனைத்து உயிர்களும் அறியாமையில் மூழ்கி இருந்தாலும், வேற்றுமையை மறந்து அப்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலையில் இருக்கும் அந்த உறக்க நிலையில் இருந்து மாறி, உலக இயல்பின் படி தங்களின் வேற்றுமைகளை விழிப்பு நிலையில் காணப் போவதன் முதல் படி அது. அப்படி என்றால் நமது உண்மை நிலை எது? அனைத்தும் ஒன்றே என்று பார்ப்பதா? அல்லது வேற்றுமைகளைக் காண்பதா? .... [மேலும்..»]

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3

சூரியன் உலகில் உயிர் வாழ ஆதாரமாக இருப்பதையும், அது தோன்றி மறைவதுடன் நமது பகல்-இரவு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதையும் கண்ட வேதகால ரிஷிகள், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தனர்... வானத்தில் உள்ள சூரியன் போல, உலகில் அக்னியையும், நம்முள்ளே உயிரையும் கண்டார்கள். என்றைக்கு ஒருவனது உயிர் பிரிகிறதோ அன்று சிவம் சவமாகி, அக்னி குளிர்ந்து அணைவதைக் கண்டனர். அதுவரை இந்திரன் நம்முள் இருந்து, பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறான்.... [மேலும்..»]

ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்

May 10, 2019
By

மரணபயமில்லை எனக்கு சாதிபேதமில்லை தந்தையில்லை எனக்கு தாயில்லை பிறப்புமில்லை உறவில்லை நட்பில்லை குருவில்லை சீடனுமில்லை சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான். ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இது வந்துள்ளது.... [மேலும்..»]

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

July 12, 2018
By

கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல... [மேலும்..»]

நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22

December 2, 2013
By

கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா மாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்... (அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக்கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21

November 7, 2013
By

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.... உணர்பவன் பொருளை உணரவில்லை என்றால், உருவங்களும் நாதங்களும் எதற்கும் பயனில்லாது போகின்றன. இவ்வாறு உணர்பவனின் பிரம்ம நிலையில் அனைத்துமே அதன் தன்மைகளான சத்-சித்-ஆனந்த சொரூபங்களாகவே விளங்குகின்றன. அந்த நிலையில் காண்பவன்- காணப்படுவது- காட்சி என்று எதனையும் பிரித்து அறிய முடியாது எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும். காணும் தனது சொரூபமே காட்சியாகி நிற்பதை உணர்வதே அறிய வேண்டியவற்றுள் எல்லாம் உயர்வான பேரறிவாகும்.... [மேலும்..»]