Posts Tagged ‘ ஆன்மீக எழுத்தாளர் ’

பாரதி மரபில் ஜெயகாந்தன்

பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது... பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற... [மேலும்..»]

அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..

April 30, 2015
By

நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே... [மேலும்..»]

அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]

அஞ்சலி: ரா.கணபதி

ரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண - விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தெய்வத்தின் குரல் - அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் - மாபெரும் ஒரு முயற்சி. பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்தது ஒரு அற்புத பொருத்தம். அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது.. [மேலும்..»]