Posts Tagged ‘ ஆரியர் ’

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

February 5, 2018
By

மன்யுவே எங்களிடம் வருக - வலியர்களிலும் வலியன் நீ - உனது நட்பான தவத்துடன் இணைந்து - எமது பகையை வென்றிடுக - நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ - விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ - செல்வங்களை எமக்கு நல்கிடுக... கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. 'ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்' (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி... [மேலும்..»]

காமிக்ஸ் படித்தீர்களா?

உலகமெங்கும் ஒடுக்கப்படும் பண்டைய பண்பாட்டு மானுட சமூகங்களுக்கான உரிமை மையமாக இருக்க வேண்டும். பங்களா தேஷில் ஒழிக்கப்படும் பௌத்த-இந்து மக்கள், குர்திஷ் சமுதாய மக்கள், திபெத்தியர், ஈழத்தமிழர், ரோமாக்கள், ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள், ஆப்பிரிக்க ஆன்மிக மரபினர் ஆகிய அனைத்து மக்களின் ஒன்றுபட்ட மையம் ஒன்றை உருவாக்கி இம்மக்களின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை ஒன்றை பாரத அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வர வேண்டும். [மேலும்..»]

ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்

ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை?.... பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும் அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்... அந்த ‘அறுவர் பயந்த ஆறமர்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 23

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்.... எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது.... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 2

மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது... இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்... [மேலும்..»]

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

October 26, 2010
By

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் - நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்...(மூலம்: மிஷேல் டேனினோ) [மேலும்..»]