தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை… ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும்.
தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்….

View More தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.

View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2

“திடீர்னு ஒரு வயசான பெரியவரு பண்டாரம் மாதிரி வந்து எதிர நிப்பாரு………டேய் அப்பா………சாப்பிட்டு நாலு நாளாவுது ஏதாச்சும் சாப்பிட வெச்சிருக்கியான்னு கேப்பாரு………இந்த ஆள இதுக்கு முன்னாடி இந்த மலைல பாத்ததில்லயே………என்ன ஏதுன்னு விசாரிச்சா சரியா பதில் சொல்ல மாட்டாரு………சரின்னு சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா.……கைல வச்சு சாப்டுக்கிட்டே அப்டியே நாலு அடி நடந்து பொகையா மறஞ்சுடுவாரு………இங்க இருக்கற நாய் மட்டும் கத்தி ஊளையிடும்………அந்த மாதிரி விதவிதமா சித்தருங்க நடமாடிட்டே இருப்பாங்க………” அவர் சொல்லச்சொல்ல சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டே இருந்தேன்..[..]

View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2

சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1

இந்த மலைக்கு செல்ல மதுரைக்கு அருகேயிருக்கும் வத்திராயிருப்பில் இருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள மலையின் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையிலிருந்து போவதுதான் கடினம் குறைந்த பாதை [..] சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள் [..]

View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1

கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார்…”கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது”….

View More கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

இறை வழிபாடு முதன்மையிடம் பெற்றிருந்தாலும் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் பேணிப் பாதுகாத்தது நமது ஆலயங்களே… குத்துப் பாட்டுகளும் கவர்ச்சி நடனங்களும் ஆலயங்களுக்கு ஏற்றவை அல்ல… தமிழகத்தில் இசைக்கென்றும், நாட்டியத்துக்கென்றும் ஒரு பல்கலைக் கழகம் அமைய வேண்டியது அவசியம்…

View More மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன?

View More நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்… துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது…

View More தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்…தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்… சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

View More உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!