Posts Tagged ‘ இசைக் கருவிகள் ’

சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

February 13, 2019
By

மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது... [மேலும்..»]

இளையராஜா @ கூகிள்

March 26, 2018
By

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார்... [மேலும்..»]

உண்மையான ரசிகன்

என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து 'உலாத்திக்' கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா?... திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது....... [மேலும்..»]

பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை

கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே... இதற்கு பதில் என்னவாகத் தான் இருக்கமுடியும்? நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது "பரிவாதினி". கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை. இதன் பின்னணீயில் இருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று....பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது... [மேலும்..»]

அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

September 20, 2014
By

ஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்... அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே. இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத... [மேலும்..»]

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார். எம்.எஸ். பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்த பொன்னுத்தாய், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர்... [மேலும்..»]

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்... துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது... [மேலும்..»]