
கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார். திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்.... [மேலும்..»]