நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே… நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாகவேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம்…

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை… வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது.. கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?…

View More திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6

அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.”… ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6