Posts Tagged ‘ இட ஒதுக்கீடு ’

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே... நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள்... [மேலும்..»]

இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

May 20, 2015
By

இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? - இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்... [மேலும்..»]

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.... இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்.... என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்... இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். ... இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன்... [மேலும்..»]

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -2

வெறுப்பை விதைக்கும் சுயநலவாதிகள்… முந்தைய பகுதி எந்த ஒரு விளைவுக்கும் காரணம் இருக்கும். அதுபோல தமிழகத்தின் ஜாதிக் கலவர சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் நமது அரசியல்வாதிகள் தான். திமுகவின் கருணாநிதி முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவரை, யாரையும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துவிட முடியாது. தமிழன் என்ற பெருமிதத்தை பிரசாரம் செய்து, திராவிட பிரிவினைவாதம் பேசி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இதில் பெரும் பங்குண்டு. உண்மையில் திமுக, முதலியார்களின் கட்சியாகவே வளர்ந்த இயக்கம். பிற்பாடு அரசியல் வெற்றிகளுக்காக பிற ஜாதிகளை அரவணைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அவர்களால் இணைக்கப்பட்டவர்கள் பிற ஆதிக்க ஜாதியினர்... [மேலும்..»]

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை... வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள்... [மேலும்..»]

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்

சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார். நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. [மேலும்..»]

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்... தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்... ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது? [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக - குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக - நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்...இந்த ஆணை...மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா? [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். [மேலும்..»]

மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

(மூலம்: தருண் விஜய்) இந்த ஏழைகளுக்கு ஏதாவது போடு" என்று உங்களை உதாசீனம் செய்யும் நிலையில் ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அலுவலகங்களில் வேலை மந்தமாக நடப்பதற்குக் காரணம் காட்டப்படுபவர்களாகவும் முட்டாள்களாகவும் மற்றவர் போடும் பிச்சையில் வாழ்பவர்களாகவும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதன் பின்னால், வால்மீகியாக வாழ்வது என்றால் என்ன என்று... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey