Posts Tagged ‘ இணையம் ’

மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி

முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்?... இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்.... [மேலும்..»]

DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்

பேஸ்புக்கில்  இந்து தர்மத்தின் பெருமைகள்,  இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு  பிரசாரங்களுக்கும் அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்..  இத்தகைய தர்ம சேவகர்களை ஒன்றிணைத்தால்  இன்னும் சிறப்பாக இணையத்திலும்  அதோடு  நேரடி களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன்  சில குழுங்களும் தொடங்கப் பட்டுள்ளன. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட DHARM பேஸ்புக் குழுமம் மிக அருமையாக இந்து தர்மம் குழித்த விழிப்புணர்வை உண்டாக்குவதுடன், களப்பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறது. இந்தக் குழுமத்தின் வலைத்தளம்: https://www.facebook.com/groups/dharamwarriors/ சமூக வலைத்தளங்களை  அரட்டைக்கும், நேர விரயத்திற்குமே பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்,  அதன் மூலம்  நல்ல பணிகளை  முன்னெடுக்கும்... [மேலும்..»]

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது.. தமிழில் இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட இந்துத்துவ பதிப்பகம் சார்பாக நடத்தப் படும் இந்த இணையதளம் பல அருமையான படைப்புக்களையும், விவாதங்களையும் வரும் நாட்களில் தொடர்ந்து வழங்கும்.. இத்தளம் வழியாக இந்துத்துவ பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கவும் முடியும். நமது வாசகர்கள் அனைவரும் தங்களது ஏகோபித்த ஆதரவை ஹிந்த்துவம் டுடே இணையதளத்திற்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். [மேலும்..»]

அஞ்சலி – டோண்டு ராகவன்

அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?.... அவர் அளவில் ஒரு போராளி தான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ “ பார்ப்பன “ என்ற துவேஷ... [மேலும்..»]

அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]

யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

“விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை கிரந்தம் தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை. அதை தனியாகத்தான் யூனிகோடில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதுவாகினும், நம்முடைய சாத்திரங்கள், கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்து முறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் தொலை தூரத்தில் இல்லை [மேலும்..»]

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

September 27, 2010
By

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?... திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது... இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்.. [மேலும்..»]

கூகுள் கொண்ட கோபம்

February 1, 2010
By

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை. [மேலும்..»]