Posts Tagged ‘ இந்தியக் கல்விமுறை ’

அழகிய மரமும் பூதனையின் பாலும்

லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன.... இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். "கிறிஸ்துவர்கள்... [மேலும்..»]

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன... இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை... [மேலும்..»]

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின்... [மேலும்..»]

தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.... இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச - சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு... [மேலும்..»]

குரு உத்ஸவ்

September 2, 2014
By

நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர்.... 'குரு' என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது. உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்...... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 9

February 15, 2014
By

கல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்... இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை... [மேலும்..»]

[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி

September 21, 2012
By

தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!... ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது... தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்... ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை... திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்... உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்... உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 8

தாழ்த்தப் பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனை அற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே !... மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது?” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. 'குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்' - ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ?...இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்... [மேலும்..»]

ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்

September 5, 2010
By

பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது... பல்கலைக் கழகங்களில் நியமனம் பெறுகிற பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் சாதி பார்த்தே நியமிக்கப் படுகிறார்கள்.... இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், இன்றைய நிலையை நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாலும், விடாமல் தனது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்... [மேலும்..»]