Posts Tagged ‘ இந்தியப் பொருளாதாரம் ’

இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது

October 18, 2019
By

இந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்... மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் முறைசாரா இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்திய பொருளாதாரமாக மாற்றினார். நீங்கள் திகைக்காமலும் பதட்டப்படாமலும் இருந்தாலே அது உங்கள் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும். நமது பொருளாதாரம்... [மேலும்..»]

அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்

மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த மூங்கில் துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது என்பதை இந்த முட்டாள்கள் சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன...... [மேலும்..»]

மோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்

February 4, 2018
By

வரி விதிப்புகளில் ஏற்ற தாழ்வுகள் மாற்றங்கள் வருவது எந்த நாட்டிலும் சகஜமே. இந்தியாவில் வரி கட்டுபவர்களே 3% மட்டுமே. வருமான விளிம்பை நீட்டிப்பதன் மூலமாக அந்த 3%க்கும் கீழே போய் விடும் அபாயம் உள்ளது. ஆரோக்யமான பொருளாதாரத்தில் அதிக சகவிகித மக்கள் வரி வலைக்குள் வர வேண்டும்..இந்தியா போன்ற ஒரு சிக்கலான நாட்டில் எல்லாமே கஷ்டம் தான். சிக்கல் தான். எதற்கும் எளிய தீர்வுகள் கிடையாது. தொலை நோக்குப் பார்வையும் ஊழலற்ற அரசையும் கூடுமானவரை அளிப்பவர்களை ஆதரிக்கிறேன். அந்த அளவில் மோடிக்கு மாற்றாக இந்தியாவில் வேறு எவரும் உருவாகாத வரை அவருக்கே என் ஆதரவு தொடரும்.. இன்று... [மேலும்..»]

இது தாண்டா பட்ஜெட்!

இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இதற்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் அரசு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே... நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு.... [மேலும்..»]

பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

ஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள்? இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.... இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது... [மேலும்..»]

ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்? பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% - உண்மை என்ன? ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா? ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?.... முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்? இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு... [மேலும்..»]

மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

October 8, 2015
By

பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) .... ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா... [மேலும்..»]

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

October 7, 2015
By

காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்... "வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக... [மேலும்..»]

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்... உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது "உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey