Posts Tagged ‘ இந்தியா ’

அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!

நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்... அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர்... [மேலும்..»]

70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்... உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது... [மேலும்..»]

டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…

இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்..»]

காஷ்மீர்: இதுவே சரியான பாதை

பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும். [மேலும்..»]

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

  தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது.  ‘அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற ஒரு கிறுக்குத்தனமான ஜோக் போதும் விகடனின் விஷமத்தை அறிய. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான் அவரது பெயரைக் கெடுக்க ஊடகங்கள் பலவகைகளில் முயன்றன. அதன் எதிர்விளைவாகவே... [மேலும்..»]

சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!

சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!

  ஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை (ஜூன் 4) நடத்திய பிரிவினைவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன). இதன் எதிரொலி அரசியல் வானில் இப்போது தீனமான சுவரத்தில் கேட்கிறது. ஆனால், இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு உலக அளவில் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய ராணுவம் போல பரிதாபத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் எளிதில் தாக்கும்... [மேலும்..»]

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]

சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

December 22, 2014
By
சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

தற்போதைய அரசியல் வானில் சாரதா நிதி நிறுவன சூறாவளியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் நிலைகொண்ட இந்த  மோசடிப் புயலின் பாதிப்பு இப்போது தில்லியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பெரும்பாலோர் திரினாமூல் காங்கிரஸ் பிரமுகர்களாகவே இருப்பதால், அக்கட்சியின் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நிலைகுலைந்து இருக்கிறார். இந்த மோசடியில் அவர் இதுவரை நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், விசாரணை வட்டத்துக்குள் வெகு விரைவில் அவரும் வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே, இப்போதே தற்காப்புக்காக காற்றில் கத்தி வீசத் துவங்கிவிட்டார். சாரதா நிதி நிறுவன மோசடியை... [மேலும்..»]

எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள... [மேலும்..»]

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey