Posts Tagged ‘ இந்திய நிலக்கரி நிறுவனம் ’

நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, அதுபற்றி அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. நீதிமன்றங்களில் குட்டு வாங்கி வாங்கி மண்டை மரத்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு, வெட்கம் மானம் பற்றி கவலைப்பட்டால் தான் ஆச்சரியம். ஏற்கனவே ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றங்களில் சந்தி சிரித்தது. அதற்கு பலிகடாவாக ஆ.ராசா கிடைத்தார். நம்பகமுள்ள ‘கூட்டாளி’யான திமுக-வை பணயம் வைத்து அந்த ஊழல் சேற்றிலிருந்து அபோதைக்கு தப்பினார்கள் பிரதமரும், ப.சி.யும். இப்போதும் அது ஒரு கொடுங்கனவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற... [மேலும்..»]