Posts Tagged ‘ இந்திய-பாகிஸ்தான் பிரிவினை ’

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு... [மேலும்..»]

ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்

September 29, 2016
By

ஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற - மொழி - இன - பிராந்திய... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 32

September 30, 2014
By

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது... 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 28

August 1, 2014
By

அதனையும் விட இந்திய அரசியல்வாதிகள் இத்தகைய கொடூரங்களை இந்தியர்களிடமிருந்து மறைத்ததுடன், ஜவஹர்லால் சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 27

July 26, 2014
By

இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்.... சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான். [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 26

July 17, 2014
By

"1947 பிரிவினையின் போது, இந்து மற்றும் சீக்கியர்களின் முகவரிகள் தாங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும் லாகூரின் மத்திய தபால் தந்தி அலுவலகத்திற்கு வந்து குவிந்தன. படுகொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் படங்கள் அந்தக் கடிதங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த செய்தி, 'முஸ்லிம்கள் உங்களின் நிலத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் கையால் இந்து, சீக்கிய சகோதரர்களுக்கு நடந்த இந்த நிலைமையே உங்களுக்கும் காத்திருக்கிறது' என்றது. இந்துக்களின் மனோபலத்தைக் குறைத்து அவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும் விதமாக முஸ்லிம் லீகினால் அனுப்பி வைக்கப்பட்டவையே அந்தக் கடிதங்கள்.. முஸ்லிம்களல்லாதவர்களை பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க முஸ்லிம் லீக் மிகுந்த... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 24

June 9, 2014
By

1947 மார்ச் 6-ஆம் தேதி அம்ரித்சருக்கு அருகில் ஷரிஃபுரா பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி அதில் பயணத்துக் கொண்டிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். கொல்லப்பட்ட இந்து/சீக்கியர்களின் பிணங்களுடன் அந்த ரயில் அமிர்த்சர் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. முஸ்லிம்களின் கொலை வெறியாட்டம் அமிர்த்சரிலும் தொடங்கியது. அமிர்த்சர் மருத்துவமனை பிணங்களால் நிரம்பி வழிந்தது... மார்ச் 7, 8 தேதிகளில் முஸ்லிம் லீக், பதினொன்று இந்து மற்றும் சீக்கியப் பிரதி நிதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியே ஏற்படுத்துவது அந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க வந்த பிரதி நிதிகளில்... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 23

May 28, 2014
By

தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்... ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 22

May 22, 2014
By

1946 ஆகஸ்ட்: முகமது அலி ஜின்னா வாளுடன் இருக்கும் படத்துடன் "...உங்களது வாட்களை எடுக்கத் தயாராகுங்கள்....ஓ காஃபிர், நீ ஒன்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளாதே. உனது அழிவு காலம் நெருங்கி விட்டது; படுகொலைகள் இனித் துவங்கவிருக்கிறது" என்ற செய்தி தாங்கிய சுற்றறிக்கை ஒன்று கல்கத்தா மேயரால் வெளியிடப்பட்டது. கிரிமினல்களையும், கொலைகாரர்களையும் ஒன்று திரட்டிய முஸ்லிம் லீக், அவர்களுக்குச் சகலவிதமான பயங்கர ஆயுதங்களையும் வழங்கியது... இந்தச் சம்பவங்களை நினைவு கூறும் லாகூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி கோஸ்லா, "தெருக்களெங்கும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன....இந்துக் குழந்தைகள் கூரைகளின் மீதிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்...பல குழந்தைகளும், மற்றவர்களும் கொதிக்கும் எண்ணை ஊற்றி... [மேலும்..»]

ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

”நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை சகிக்கமுடியாததாக உள்ளது. .” என்றார் போதிசத்வ பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ...”கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்.” என்றார் ஜனாப் ஜவஹர்லால் நேரு... நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து... [மேலும்..»]