Posts Tagged ‘ இந்திய ராணுவம் ’

ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்

பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய... [மேலும்..»]

காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

September 20, 2014
By
காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. ஒரு முக்கியமான சம்பவம். காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி கிலானி வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் ராணுவவீரர்களால் மீட்கப்பட்டார். இந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியானவுடன் அவர்,  “ஆபத்துக்காலத்தில் ஆக்கிரமிப்பு... [மேலும்..»]

23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்

நேருவின் பொருளாதார அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1958 இல் ஆயுள் பாதுகாப்பீடு ஊழலில் பதவி விலக நேர்ந்தது. (இதை பாராளுமன்றத்தில் தன் மருமகன் ஃபெரோஸ்காந்தியே எழுப்பியது தற்செயலா அல்லது நேருவின் ராஜ தந்திரமா என்பது தெரியவில்லை.) நேருவின் உதவியுடன் செயல்பட்ட ஜெயந்தி தர்ம தேஜா பண மோசடி செய்து நாட்டை விட்டே ஓடினார். ஒரு இந்திய குத்ராச்சி என்று வைத்து கொள்ளூங்கள். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழலினாலோ 2-ஜி ஸ்பெக்ட்ரத்தினாலோ எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை என்பது போல நேருவுக்கும் இந்த ஊழலுக்கும் தனிப்பட்ட ஆதாயங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை.... 1962 - இந்திய ராணுவம் மிக... [மேலும்..»]

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால் கங்கையிலும், யமுனையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வழியில்  நதியின் பாதைக்கு இடையூறாகவும் ஆக்ரமித்தும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் விடுதிகளோடு அருகில் இருந்த கட்டிடங்களையும், வழிபாட்டு தடங்களையும்  நகர்த்தி விட்டது. தனக்கான பாதையை நதிகள் ஏற்படுத்தி கொண்டது.  அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி நதிகளிலும்... [மேலும்..»]

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளிப் பேரிடரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் மரணித்துள்ளனர். அவர்களுக்கு நமது இதய அஞ்சலி. உற்றாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இமயச் சாரலில் உள்ள நூற்றுக் கணக்கான மலைக்கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பாரதத்தின் பல பகுதிகளிலும் இருந்து புனித யாத்திரைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத், பத்ரி நாத், ருத்ரபிரயாகை, உத்தரகாசி, கௌரி குண்டம் ஆகிய இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் வரலாறு காணாத வகையில் மாபெரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.... [மேலும்..»]

காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காஷ்மீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 25.3.2013ந் தேதி காஷ்மீர் சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி காவல் துறையினர் கைது செய்த ஹிஸ்-புல்-முஜாஹிதீன் (Hizb-ul-Mujahideen ) அமைப்பைச் சார்ந்த தற்கொலை படையின் பொறுப்பாளரான லியாகத் ஷா (Liaquat Shah ) என்பவனை டெல்லி காவல்துறையினர் கைது செய்த விவகாரத்தில், மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறையினரும் இடையே நடக்கும் அதிகார போட்டியின் காரணமாக சில முக்கியமான கருத்துக்களை சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநில முதல்வரின் கருத்து இந்தியா இறையான்மைக்கு எதிரான கருத்தாக தெரிவதால் இக் கட்டுரை எழுத... [மேலும்..»]

பாகிஸ்தானை நம்பக் கூடாது

இந்திய எல்லைக் காவல் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னாபின்னப் படுத்திய சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது..... எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கும் வகையில் 1,751 கி.மீ தூரம் வரை வேலி அமைத்து முழு கண்காணிப்பு செய்ய வேண்டும்... இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மதராஸக்களும் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பும், ஊடுருவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றன.... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1

பூஞ்ச்சில் ஒரு கடை வீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம், “எடை சரியில்லை. முஸ்லீம்களை ஏமாற்றுகிறாயா?” எனக் கூச்சலிட்டு கடைக்காரர் மண்டையைப் பிளந்து கலவரத்திற்கு வித்திட்டார்கள். இதைப்போலவே ஜம்முவில் ஒரு முஸ்லீம் பெண் குழந்தைக்கு ஒரு இந்து சுற்றுலாப் பயணி அன்பெழுக நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டார் என்று சொல்லி சுற்றுலா பேருந்து ஒன்றையே ஏரியில் முழ்கடித்தார்கள். [மேலும்..»]

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

November 15, 2010
By

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்... முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது... இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது...(மூலம்: ஜான் மெக்லிதான்) [மேலும்..»]

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

September 2, 2010
By

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது... நக்சல் பாதிப்பு பகுதிகளில் "சிவப்பு" பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?... உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்... [மேலும்..»]