ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?[..]

View More ரமணரின் கீதாசாரம் – 11

ரமணரின் கீதாசாரம் – 5

ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது.

View More ரமணரின் கீதாசாரம் – 5