
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…