
திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை… திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?… திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை…