Posts Tagged ‘ இந்துமத வெறுப்பு ’

‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் - 3 (Swadeshi Indology - 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த 'திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு' குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி... [மேலும்..»]

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]

இலங்கையில் இந்துக்கோவில் இடிப்பு!

2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு முதலியார்குளம் கிராமத்து இந்துமக்கள் அச்சமுற்றார்கள்.  கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன.  இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. இந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது.  கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது. [மேலும்..»]