Posts Tagged ‘ இந்து இயக்கங்கள் ’

தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்

வரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே... [மேலும்..»]

அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!

நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்... அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர்... [மேலும்..»]

இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - கோட்சே குற்றவாளியா?... [மேலும்..»]

வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்

July 28, 2018
By

மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் "வன்னிய கிறிஸ்தவர்" "கிறிஸ்தவ வன்னியர்" ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?... அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை... மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட... [மேலும்..»]

உலக இந்து சம்மேளனம் 2014

November 22, 2014
By

இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று... "2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை" என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்... 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்... உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா... [மேலும்..»]

சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது.  இருநூறுக்கும் அதிகமான பல்வேறு  வகைப்பட்ட இந்து  அமைப்புகள் பங்கு பெறுகின்றன.  தமிழ்ஹிந்து இணையதளமும் ஒரு அரங்கு அமைத்துள்ளது. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்:  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம்,  திருவான்மியூர். அனைவரும் வருக! ஆதரவு தருக! அழைப்பிதழ் கீழே.     [மேலும்..»]

விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். [மேலும்..»]

அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்

ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.... தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்.... [மேலும்..»]

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

1.7.2013ந் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு வெள்ளையப்பன் பஸ் நிலையம் அருகில் பட்டப் பகலில் 23 வெட்டுக்களுடன் படு கொலை செய்யப்பட்டார்.  வெள்ளையப்பன் கொலையை போலவே, 19.7.2013ந் தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஆடிட்டர் ரமேஷ் இரவு 10 மணியளவில் தனது ஆலுவலகத்திற்கு வெளியே பயங்கரமான முறையில் வெட்டிக் கொள்ளப்பட்டார்  நடந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமில்லாமல், 1980 முதல் இன்று வரை தமிழகத்தில் கொல்லப்பட்ட இந்து இயக்களின் பொறுப்பளார்களை கணக்கில் கொண்டால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறித் தாக்குதல் எந்தளவிற்கு இருந்ததே அதே... [மேலும்..»]

இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை

இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர் களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் சமுதாய விரோத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது... இந்துக்களின் உரிமைகளுக்காக களமாடி வீரமரணம் அடைந்து பாரத அன்னையின் பாதங்களில் பலிதானியாகி உள்ள இப்பெரும் வீரரின் பிரிவால் வருந்தும் அவர் குடும்பத்தினருடனும் இந்து இயக்கங்களுடனும் தமிழ்ஹிந்து தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறது.... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey