
“இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்… பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு… முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள்.
Read more →