பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..

View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

தீர்த்த கரையினியிலே……

“60களில் நான் படிக்கும் காலத்தில் சற்று பெரிய நீர் தேக்கமாகயிருந்த இந்த இடம் இன்னும் அழகான காடாயிருந்தது. நீர்த்தேக்கதில் இரண்டு பாம்புகள் நாடனமாடிக்கொண்டிருந்தை பார்த்த நினைவுகூட இருக்கிறது” என்று சொல்லும் திருமதி லீலாஸாம்ஸனின் எண்ணத்தில் உதித்தது இந்த ”புஷ்கரணியில் சங்கீதம்” என்ற புதிய முயற்சி.

”இது நான் முயற்சிக்கும் புதிய விஷயம் இல்லை. பண்டைய காலங்களில் குளங்களின் மண்டபங்களில் கச்சேரிகள் நடப்பது வழக்கமாயிருந்தது.”

View More தீர்த்த கரையினியிலே……

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]

அனைத்துப் பொருள்களிலும், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் தண்ணீரிலும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன… சாத்தான்கள் உலகையோ, மனிதர்களையோ அழிக்கப்போவதில்லை. மனித உருக்கொண்ட ‘அறிவியல் எதிர்ப்பு’ சாத்தான்கள்தான் உலகை அழிக்க அரும்பாடு படுகிறார்கள்.. பாகவத புராணத்தில், பொய்களே கலிகாலத்தில் நம்பப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் பொய்களை மறுதலித்து உண்மைகளை தைரியமாகக் கூற ..

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2

ஓர் அளவிற்கு நோய் வராமல் தடுக்கும் குணமுள்ள உணவை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதற்கு மசாலா தடவி, நோய் வந்தவுடன் அந்த உணவு பெரிய நோய்களையே சரிசெய்து விடும் என்பார்கள்… புற்றுநோய் சமூகத்தில் பெரிய அளவில் இருந்திருக்கவேயில்லை என்பது வரலாற்றிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது… இது அறிவியல்; இது ஊகம், இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரவில்லை- என்று பிரித்து எழுதுவதே சரி…

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

அறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது… உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான்…

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

நட்சத்திரங்களின் கதை!

ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.

View More நட்சத்திரங்களின் கதை!

கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

View More கள்ளக் காதல்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்… விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்…

View More விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்

அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்… வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

View More வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது… விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்… சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது… இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது…

View More ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்