Posts Tagged ‘ இயற்கை ’

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை... ஓலெஸ்ட்ரா - செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு. இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது; வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது... [மேலும்..»]

புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்... இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது. [மேலும்..»]

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது. [மேலும்..»]

அற்றவர்க்கு அற்ற சிவன்

'புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன்' என்று கலைஞர் ஒருகாலத்தில் எழுதிய திரைப்பட வசனம் இந்த இயற்கை நியதி உலக நியதியாகும் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது.... ...கம்யூனிசம், கேபிடலிசம் முதலிய இசங்களின் வளர்ச்சியை இந்த இயற்கை நியதியின் அடிப்படையில் காண முடியும். இயற்கையான தன்னலம் பேணுதலுக்கு இந்த 'இசங்கள்' தத்துவார்த்தங்கள் கற்பிக்கின்றன. [மேலும்..»]

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம். [மேலும்..»]

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே "நீருக்கான உலகப் போரில்" அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் "உணவாகும் நீரை" கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது... நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம். [மேலும்..»]

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்... இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும். [மேலும்..»]

திரைப்பார்வை: அவதார்

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட 'ஆஹா'க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம். [மேலும்..»]

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை. [மேலும்..»]

நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை திருவடி இரண்டும் மறையொளியாம் வித்தகர் அறிவே பட்டாடை-அவர் விநயம் அன்னையின் அணிகலனாம் [மேலும்..»]