Posts Tagged ‘ இயேசு கிறிஸ்து ’

பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

February 1, 2019
By

அக்கவிதையில் பாரதி சொல்லும் "உயிர்த்தெழுதல்" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்... கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும்... [மேலும்..»]

விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

October 22, 2016
By

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குலைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு கிறிஸ்தவ மதப்பிரசாரம்..சுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், "அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை," என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், [மேலும்..»]

திரைப்பார்வை: The Man from Earth

ஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது.... யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம்.... கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது.... [மேலும்..»]

ஏசுவுக்கான இந்து நரபலிகள்

September 20, 2011
By

சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]

இனி நாம் செய்ய வேண்டுவது…

இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்? [மேலும்..»]

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது... இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்து கொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள்...ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே... [மேலும்..»]

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

September 14, 2010
By

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது... கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர்... இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்... [மேலும்..»]

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

September 14, 2010
By

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே 'தமிழ்ஹிந்து'வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்... அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு... மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்... [மேலும்..»]