Posts Tagged ‘ இராமன் ’

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும்... [மேலும்..»]

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்..... “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன... [மேலும்..»]

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

April 22, 2013
By

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ். ராமன் 30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும் அசோக வனத்திலிருந்த சீதையை அழைத்து வருமாறு இராமர் விபீஷணனிடம் கேட்டுக்கொண்டார். இராவணனின் அரண்மனைக்குள் அந்த வனம் இருந்ததால் அவள் அங்கு காவலில் வைக்கப்பட்டு  இருந்தாள். கைகேயிடம் சொன்னபடி அந்தப் பதினான்கு வருஷங்களும் அவர் காட்டை விட்டுவிட்டு ஒரு கிராமத்தின் எல்லையைகூடத் தாண்டவில்லை. அதனால் அவர் சீதை இருக்குமிடம் தேடி இலங்கைக்குள் நுழைந்திருந்தால், அது ஒரு விதி மீறலாகி இருந்திருக்கும். சீதையை மீட்பதற்குத்தானே அவர்கள் கடலில் பாலம் கட்டியும், பலத்த இழப்புடனும் அரக்கர்களுடன் போரிட்டார்கள் என்பதால்,... [மேலும்..»]

இன்று போய் நாளை வா – எதற்கு?

"என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான். இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23

November 10, 2012
By

சீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

October 24, 2012
By
Hanuman Returns

யஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்... தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது... ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்... எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

September 22, 2012
By

இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்... தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்... தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்... ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்... இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார்கள்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

September 10, 2012
By
இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

August 26, 2012
By

நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு... நமக்கு இன்று கோடிகள் தான் பெரிய எண். ஆனால் எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது... இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey