Posts Tagged ‘ இராமாயணம் ’

இந்து மத விளக்கங்கள், ராமாயணம், வழிகாட்டிகள்

அனுமன் எனும் ஆதர்சம்

அனுமன் எனும் ஆதர்சம்

நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்... சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.... [மேலும்..»]

ஆன்மிகம், இலங்கைத் தமிழர், சைவம், நிகழ்வுகள், வரலாறு

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

தென்னகத்தின் செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.” [மேலும்..»]

இலக்கியம், தொடர்

உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18

உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18

‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப் பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம் செய்துவிட்டாயே, பாவி! வானில் பறந்து செல்லும் உன்னுடைய ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நான் இதே போன்ற நாவல்... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம், விவாதம்

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?... காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்... ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.... [மேலும்..»]

இலக்கியம், ராமாயணம், வீடியோ

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

ஒவ்வொரு ராமாயண நூலும், "இதை ஒட்டி அல்லது வெட்டி இதனின்று வேறு பட்டு அல்லது இதனின்று முரண்பட்டு" என்ற வகையில், கதைக்களனை எடுத்துச் செல்லும் ராமாயண கதாசிரியரோ அல்லது ஆராயப்புகும் ஆய்வாளரோ அடிப்படை அலகீடாகக் கொள்ள விழைவது வால்மீகி ராமாயணம் தான். மனித சமுதாயத்துக்கு முதன் முதலில் கிட்டிய ராமாயண மூல நூல் இது தான் என்பது மறுக்கவியலாதது. அப்படி மறுப்பதற்கு ஏதுவான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை... பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். வடக்கு மற்றும் தெற்கு என்ற... [மேலும்..»]

இலக்கியம், ராமாயணம், விவாதம்

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த... [மேலும்..»]

இலக்கியம், ராமாயணம், விவாதம்

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு  ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1

1875 முதற்கொண்டு 1975 வரைக்கும் வெவ்வேறு இந்தியவியல் அறிஞர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதில் ஒரு முக்யமான புள்ளி Bhandarkar Oriental Research Institute வாயிலாக அந்த நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பை ஆய்வின் பாற்பட்டு பதிப்பித்த அறிஞர் பெருமக்களுடைய கருத்துக்களாகும்.. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய "முன்னூறு ராமாயணம்" என்ற வியாசத்தில் சில கருத்துக்களை முன்வைக்கிறார். "அசல் படைப்பு என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொரு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது" என்பது எந்த அளவுக்குச் சரியானது? "தேவ பாடையின் இக்கதை செய்தவர் - மூவர்... [மேலும்..»]

கம்பராமாயணம், தரவிறக்கம், ராமாயணம்

கம்பராமாயணம் – 66 : பகுதி 3

July 4, 2015
-
கம்பராமாயணம் – 66 : பகுதி 3

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?.... இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு... [மேலும்..»]

கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

July 3, 2015
-
கம்பராமாயணம் – 66 : பகுதி 2

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின.... எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.... [மேலும்..»]

கம்பராமாயணம், ராமாயணம்

கம்பராமாயணம் – 66 : பகுதி 1

July 1, 2015
-
கம்பராமாயணம் – 66 : பகுதி 1

இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது... "சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை..." [மேலும்..»]