Posts Tagged ‘ இராவணன் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?

September 10, 2017
-
இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?

தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம், வழிகாட்டிகள்

அனுமன் எனும் ஆதர்சம்

அனுமன் எனும் ஆதர்சம்

நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்... சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம்

இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்

இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்

தான் இயற்றிய இந்தச் சிவதாண்டவத் தோத்திரத்தினையும் பாடுகிறான். இவற்றினால் மனமகிழ்ந்த சிவபிரான் அவனை விடுவித்து, அவன் பக்தியை மெச்சி சந்திரஹாசம் எனும் வாளையும் பரிசளிக்கிறார். கம்பீரமான குரலில் பாட, சிவதாண்டவத்தின் ஜதிகளுக்கொப்ப சொற்களைப் பயன்படுத்தி அவன் இயற்றியுள்ள இந்த சமஸ்கிருதத் தோத்திரம் படிக்கவே இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பெரும்பாலான அடிகளில் ஒரே எழுத்தில் தொடங்கும் (மோனை) பலவிதமான பொருள்கொண்ட சொற்கள் அமைந்து தாண்டவத்தின் ஆண்மைத்தனமான அழகை (பௌருஷத்தை) சித்தரிக்கின்றன. சொற்கள் எழுப்பும் ஒலிகளும் வார்த்தை ஜாலங்களாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

October 14, 2014
-
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். ... உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக்... [மேலும்..»]

கம்பராமாயணம், ராமாயணம்

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும்... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம், ராமாயணம்

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப்... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

இன்று போய் நாளை வா – எதற்கு?

இன்று போய் நாளை வா – எதற்கு?

"என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான். இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

September 22, 2012
-
இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்... தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்... தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்... ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்... இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார்கள்... [மேலும்..»]

இலக்கியம், ராமாயணம்

இராமாயணத்தின் மூன்று தளங்கள்

இராமாயணத்தின் மூன்று தளங்கள்

ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு... இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம்... உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

August 19, 2012
-
இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

கோப முகத்துடனும், தூசியைக் கிளப்பும் வண்ணம் கால்களை உதைத்துக் கொண்டும் லக்ஷ்மணன் கிஷ்கிந்தா நோக்கி நடந்த நடையிலிருந்தே ஏதோ வேண்டாதது நடக்கலாம் என்று யூகித்த வானரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டனர். குடித்துக்கொண்டும், அரசவையில் பேசிச் சிரித்துக்கொண்டும் அரண்மனையில் சிங்காதனத்தில் வீற்றிருந்த சுக்ரீவனுக்கு, லக்ஷ்மணன் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டதாக இளவரசன் அங்கதன் தெரிவித்தான். இதற்குள் விவரங்களைத் தெரிந்துகொண்ட அமைச்சர் அனுமானும் சுக்ரீவனை அமைதியாக இருக்குமாறும், லக்ஷ்மணன் கோபத்தைத் தூண்டிவிடாதவாறு பேசுமாறும், அவன் கோபத்திற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்குமாதலால் மன்னிக்க வேண்டிக்கேட்கவும் சொல்கிறான். மழைக்காலம் முடிந்தும் முன்பு அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீதையைத் தேடும் வேலையை... [மேலும்..»]