Posts Tagged ‘ இலங்கைத் தமிழர் ’

இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது... இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற... [மேலும்..»]

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்.. விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின.... [மேலும்..»]

இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

மன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது. நாற்பது விழுக்காடு இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை. அனைவரும் கிறித்தவர்களே! மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம். காவல் துறையோ பௌத்தர்கள் கையில்… [மேலும்..»]

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்... உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல்... [மேலும்..»]

பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா?

சிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்... மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த... [மேலும்..»]

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது..."பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை... " [மேலும்..»]

இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்... தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் - இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்... முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை... இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு... [மேலும்..»]

ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

May 26, 2014
By

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? "ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்" என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை... தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?... தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்... [மேலும்..»]

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று... மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை... [மேலும்..»]

பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை

இதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்... தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம். [மேலும்..»]