Posts Tagged ‘ இலங்கை மனித உரிமை மீறல்கள் ’

இலங்கைத் தமிழர், நிகழ்வுகள்

இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது... இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற... [மேலும்..»]

ஆன்மிகம், இலங்கைத் தமிழர், கோயில்கள், சைவம், வழிகாட்டிகள்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது..."பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை... " [மேலும்..»]

அரசியல், இந்த வாரம் இந்து உலகம், இந்து மத மேன்மை, சமூகம், நிகழ்வுகள், பொது

உலக இந்து சம்மேளனம் 2014

November 22, 2014
-
உலக இந்து சம்மேளனம் 2014

இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று... "2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை" என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்... 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்... உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா... [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர், தேசிய பிரச்சினைகள், தொடர்

நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்

நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்

காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை - பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி - பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்.... எனவேதான் வலிமையான பாரதத்துக்காக தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில் குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ எல்லாத் தமிழருக்கும், முக்கியமானவர் ஆகிறார்.... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 7

விதியே விதியே… [நாடகம்] – 7

இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, இன்றைய ராஜபக்சே வரை அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள். சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன... கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் ... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 6

விதியே விதியே… [நாடகம்] – 6

ஒருவர் நிதானமாக நடந்து வந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் வந்து அந்தத் தீயில் சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் அடிக்கடி துண்டுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்... குழந்தை : நாம சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கோமா. இல்லைன்னா ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டோமா?..... ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரும் அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 5

விதியே விதியே… [நாடகம்] – 5

பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 4

விதியே விதியே… [நாடகம்] – 4

என்னங்கடா கதை விடறீங்க..? ஒரு மண்ணோட மைந்தர்களை வந்தேறின்னு சொல்றது இருக்கே எவ்வளவு பெரிய புரட்டு தெரியுமா..? இத்தனைக்கும் எல்லாரும் சந்தோஷமா வாழலாம்னுதான் சொல்றோம். அது பொறுக்க மாட்டேங்குது... அதுதான் இங்கயும் நடந்துச்சு. மருத்துவமனைக்குள்ள கொண்டுபோய் ஆயுதங்களைப் பதுக்கி வெச்சுக்கிட வேண்டியது. அப்பறம் அய்யோ... ஆஸ்பத்திரிக்கு அடிபட்டு வந்த அப்பாவிங்களைக் கூட விட்டு வைக்கலியேன்னு பொலம்ப வேண்டியது. செஞ்சிலுவை சங்க ஆட்களே இவங்களோட அடாவடி தாங்க முடியாம எத்தனை தற்காலிக மருத்துவமனைகளை இடம் மாத்திக்கிட்டுப் போயிருக்காங்க தெரியுமா?...... நூத்துக்கணக்குல ஆயிரக்கணக்குல நாங்க கொல்லப்பட்டது எல்லாமே வெறும் நாடகம்தானா..? எங்களோட அழுகைக்குரல் எல்லாம் வெறும் நடிப்புதானா உங்களுக்கு..?... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 3

விதியே விதியே… [நாடகம்] – 3

ஐ.நா. தலைவர்: ரெண்டு பிரிவினரும் சேர்ந்து வாழுங்கன்னுதான் சொல்றோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்... குழந்தை : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா?... ஐ.நா. தலைவர்: வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது?.... குழந்தை... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 2

விதியே விதியே… [நாடகம்] – 2

ஆயா கதை சொல்லு ஆயா - குழந்தைகள் நச்சரிக்கின்றன. ஆயா : ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். தில்ஷன் (பக்கத்தில் இருக்கும் இன்னொரு குழந்தையிடம்): ரெண்டு ராஜா இருந்தா நாடு தாங்காது.... மதி: எதிரியோட பலம், வியூகம் தெரியாம சண்டை போடற எப்பவுமே முட்டாள்தனம்தான் இல்லையா? ஆயா : ஆனா, இந்த இடத்துல அபிமன்யு எதிரியோட பலம் தெரியாம மோதலை. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு போராட வேண்டிய இடத்துல ஒருத்தரை அதுவும் சின்னஞ்சிறு பாலகனை ஒரே நேரத்துல பலர் அநியாயமா சுத்தி வளைச்சுக் கொன்னுட்டாங்க. அபிமன்யுவை ஜெயிச்சது வீரத்தினால இல்லை,... [மேலும்..»]