Posts Tagged ‘ இலங்கை ’

வரலாறு

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது.... [மேலும்..»]

வரலாறு

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்....... [மேலும்..»]

வரலாறு

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1

பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தான்.. இலங்கையிலிருந்து லங்கபுர தண்டநாத தலைமையில் ராமேஸ்வரத்தில் வந்திறங்கும் சிங்களப்படைகள் அங்கு பாண்டியப்படைகளுடன் போரிட்டு வெற்றிகொண்டு ராமேஸ்வரத்தைக் கைப்பற்றுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாம்பனுக்கு மிக அருகில், ராமேஸ்வரக் கடலுக்கு நான்கு காத தொலைவிலிருக்கும் குண்டக்கல்லைக் கைப்பற்றுகிறார்கள்.. நெட்டூரில் தனது தலைமையகத்தை அமைத்துக் கொண்ட தளபதி லங்கபுரவிற்கு கொலையுண்ட பராக்கிரம பாண்டியனின் உயிர்தப்பிய... [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர், சைவம், விவாதம்

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்.. விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின.... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை... [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர்

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா? நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர், வரலாறு

இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்... தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் - இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்... முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை... இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு... [மேலும்..»]

அரசியல்

ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

May 26, 2014
-
ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? "ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்" என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை... தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?... தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்... [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர்

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று... மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை... [மேலும்..»]