மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்… மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக… நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம்.

View More மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!

View More காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..

View More மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்…

View More இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

… இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்…. அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்….

View More வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்

இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பாரக்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்.

View More சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்